Advertisement

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகிய கேஎல் ராகுல்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் கேஎல் ராகுல் பங்கேற்கமாட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 27, 2022 • 15:34 PM
KL Rahul is set to miss the five-match T20I series against West Indies!
KL Rahul is set to miss the five-match T20I series against West Indies! (Image Source: Google)
Advertisement

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே வரும் 29ஆம் தேதி முதல் டி20 தொடர் தொடங்க உள்ளது, ஆகஸ்ட் 7ஆம் தேதிவரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடரில் இந்திய 2-0 என்று தொடரை வென்றுவிட்ட நிலையில் அடுத்ததாக டி20 தொடரில் விளையாட உள்ளது. 

ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவண் தலைமையில் இந்திய அணி விளையாடியது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. டி20 தொடருக்கு ரோஹித் சர்மா மீண்டும் அணியில் இணைய உள்ளார். 
கேஎல் ராகுல் இல்லாத நிலையில் டி20 தொடருக்கு தொடக்க வீரராக இஷன் கிஷன் அல்லது ரிஷப் பந்த் இருவரில் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்குவார்  எனத் தெரிகிறது.

Trending


கடந்த ஜூன் மாதம் ஹெர்னியா அறுவை சிகிச்சைக்குப்பின் ராகுல் இதுவரை சர்வதேச போட்டிகளில் எதிலும் பங்கேற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கு கேப்டனாக ராகுல் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், கொரோனாவில் பாதிக்கப்பட்டார். 

தற்போது கொரோனாவிலிருந்து மீண்டாலும், அவரின் உடலுக்கு ஓய்வு தேவை .அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப்பின் ஜிம்பாப்பே தொடரில் ராகுல் நிச்சயம் விளையாடுவார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement