Advertisement

ஐசிசி டி20 தரவரிசை: ஐந்தாம் இடத்திற்கு ராகுல் முன்னேற்றம்!

சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Advertisement
KL Rahul Moves Up To Fifth Spot In T20I Playing Rankings
KL Rahul Moves Up To Fifth Spot In T20I Playing Rankings (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 24, 2021 • 06:42 PM

இந்தியா - நியூசிலாந்து, பாகிஸ்தான் - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீரர்களுக்கான டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 24, 2021 • 06:42 PM

இதில் வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 4ஆவது இடத்தில் உள்ளார். 

Trending

அதேசமயம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 80 ரன்கள் எடுத்த ராகுல் 5ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 10ஆவது இடத்தையும், நியூசிலாந்து டி20 தொடரில் தொடர் நாயகன் வென்ற ரோஹித் சர்மா 2 இடங்களில் முன்னேறி 13ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்துவீச்சாளர்களில் நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் 10 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தையும், இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் 5 இடங்கள் முன்னேறி 19ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். தீபக் சஹார் 19 இடங்கள் முன்னேறி 40ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement