காயத்தில் இருந்து மீண்ட ராகுல்; இங்கிலாந்து டூருக்கு ரெடி!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த கே.எல். ராகுல் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் கே.எல். ராகுல். டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக இருந்த கேஎல் ராகுல் மோசமாக விளையாடிதன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இருப்பினும் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரின்போது வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்ய முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்ற கேள்விகள் எழ தொடங்கின. இந்த நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள கே.எல்.ராகுல் மீண்டும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் அவர் நிச்சயம் இங்கிலாந்து செல்வது உறுதியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now