Advertisement

ஐபிஎல் 2022: தொடர் தோல்விகளில் சிக்கி தவிக்கும் மும்பை இந்தியன்ஸ்; லக்னோ அபார வெற்றி!

ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Advertisement
KL Rahul Smashes Ton As Mumbai Indians Lose Another
KL Rahul Smashes Ton As Mumbai Indians Lose Another (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 25, 2022 • 12:52 AM

ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸூம் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 25, 2022 • 12:52 AM

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியில் ஒருமுனையில் கேஎல் ராகுல் நிலைத்து நின்று அடித்து ஆடிய நிலையில், மறுமுனையில் டி காக்(10), மனீஷ் பாண்டே(22), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(0) ஆகியோர் ஏமாற்றமளித்தனர்.

Trending

ராகுல் அடித்து ஆடினாலும், மறுமுனையில் மற்ற வீரர்களை அடிக்கவிடாமல் இழுத்துப்பிடித்து ஸ்கோரை கட்டுப்படுத்தினர் மும்பை பவுலர்கள். க்ருணல் பாண்டியா(1), தீபக் ஹூடா(10), ஆயுஷ் பதோனி(14) ஆகியோரும் ஆட்டமிழந்தனர். 

ஆனால் மறுமுனையில் நங்கூரம் போட்டு அடித்து ஆடிய ராகுல் சதமடித்தார். இந்த சீசனில் 2வது சதத்தை பதிவு செய்தார் ராகுல். 62 பந்தில் 103 ரன்களை குவித்தார் ராகுல். ஆனாலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவரில் 168 ரன்கள் மட்டுமே அடித்தது லக்னோ அணி. 

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க வீரர் ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருப்பினும் மறுமுனையில் தடுமாறிய இஷான் கிஷான் 8, டேவால்ட் ப்ரீவிஸ் 3 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் 39 ரன்களோடு ரோஹித் சர்மா வெளியேற, சூர்யகுமார் யாதவ் 7 ரன்களோடு வெளியேறி அதிர்ச்சியளித்தார். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா சிறப்பாக விளையாடி 38 ரன்களை எடுத்தார்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்கத் தவறியதால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 8 தோல்விகளைச் சந்தித்து பிளே ஆஃப் வாய்ப்பை முற்றிலுமாக இழந்தது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement