
இந்திய அணியின் இளம் முன்னணி அதிரடி தொடக்க வீரர் கே.எல். ராகுல் கடந்த சில ஆண்டுகளாகவே தனது அபாரமான பேட்டிங் திறனை வெளிக்காட்டி வருவதால் தற்போது மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக இடம்பெற்று விளையாடி வருகிறார். குறிப்பாக தற்போது கேப்டனாக இருக்கும் ரோஹித்துக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாகவும் அதிகபட்ச வாய்ப்பு கே.எல் ராகுலுக்கு உள்ளது என்றால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் நம்பிக்கையான வீரராக விளையாடி வருகிறார்.
தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வரும் ராகுல் தற்போது இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை. மேலும் டெஸ்ட் தொடருக்கு அவர் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மேலும் காயம் அதிகரிக்கக் கூடாது என்பதற்காக இந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் வெளியேறியிருந்தார்.
ஆனால் இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமெனில் மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காயம் சரி அடைந்தாலும் அவர் இந்திய அணிக்காக திரும்பாமல் தற்போது எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக பெங்களூரில் முன்கூட்டியே பயிற்சியை துவங்கியுள்ளார்.