KL Rahul tests positive for Covid-19 before Windies tour (Image Source: Google)
இந்திய அணியின் சீனியர் கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல். காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ராகுல் விளையாடவில்லை.
ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்து திரும்பிய ராகுல், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்துவருகிறார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் அணியில் ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் அணியில் இடம்பெறாத ராகுல், டி20 அணியில் இடம்பெற்றிருந்தார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே முதலில் 3 ஒருநாள் போட்டிகளும், அதைத்தொடர்ந்து 5 டி20 போட்டிகளும் நடக்கின்றன. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் ராகுல் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஃபிட்னெஸை பொறுத்து கடைசி நேரத்தில் அவர் ஆடுவதும் ஆடாததும் முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.