
KL Rahul's Century Takes Lucknow Super Giants To 168/6 Against Mumbai Indians (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 37ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் கேப்டன் கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையிலிருந்த ராகுல் அரைசதத்தைக் கடந்தார்.