Advertisement

ENGW vs NZW: ஹீதர் நைட் சதத்தில் தொடரை வென்றது இங்கிலாந்து!

நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 24, 2021 • 11:27 AM
Knight's Century Takes England To Series Win Against New Zealand
Knight's Century Takes England To Series Win Against New Zealand (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி  செட்டர்வைட், மார்டினின் அரைசதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 244 ரன்களைச் சேர்த்தது. இதில் மார்டின் 65 ரன்களையும், செட்டர்வைட் 54 ரன்களையும் சேர்த்தனர். 

Trending


இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு வின்ஃபீல்ட் ஹில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து 33 ரன்களைச் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement