Advertisement

ரிக்கி பாண்டிங் சாதனையை காலி செய்ய காத்திருக்கும்‘கிங்’ கோலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 15, 2021 • 15:36 PM
Kohli could break Ricky Ponting’s major record in WTC final
Kohli could break Ricky Ponting’s major record in WTC final (Image Source: Google)
Advertisement

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. 

ஐசிசி முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவதால், இந்த இறுதிப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending


இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை நிகழ்த்த வாய்ப்புள்ளது. அதாவது, விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ளார். அதில் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும், டெஸ்ட்டில் 27 சதங்களும் அடித்துள்ளார். இதில் கேப்டனாக 41 சதங்கள் அடித்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 41 சதங்கள் அடித்ததே தற்போது வரை உலக சாதனையாக உள்ளது. 

இதனால் தற்போது நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்துவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement