
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச்சென்றது. எளிதாக டிரா செய்திருக்க வேண்டிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி படு மோசமாக விளையாடி தோல்வியில் முடிந்தது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை எழுப்பியது.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்து பேசிய கேப்டன் விராட் கோலி, இறுதிப்போட்டி ஒரு போட்டியாக இல்லாமல் 3 போட்டியாக இருந்திருந்தால் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க சரியாக இருந்திருக்கும் என்று கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
மேலும் கோலி தோல்வியடைந்த விரக்தியில் தான் இப்படி பேசுகிறார் என்று பலரும் அவரை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இந்த கருத்துக்கு பதில் அளித்த இந்திய அணியின் முன்னணி வீரரான அஸ்வின், கோலி கூறியதை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். கோலி 3 போட்டிகள் கொண்ட இறுதி ஆட்டம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.