Advertisement

SA vs IND: இந்திய அணியின் பேட்டிங் குறித்து விமர்சித்த விக்ரம் ராத்தோர்!

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இன்னும் கூடுதலாக 50 ரன்கள் எடுத்திருக்கவேண்டும் என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் கூறியுள்ளார்.

Advertisement
Kohli was disciplined, with bit of luck he could have scored big: Vikram Rathour
Kohli was disciplined, with bit of luck he could have scored big: Vikram Rathour (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 12, 2022 • 11:23 AM

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று, தொடரை 1-1 என சமன் செய்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 12, 2022 • 11:23 AM

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று கேப்ட்வுனில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

Trending

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 77.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 79 ரன்களும் புஜாரா 43 ரன்களும் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா 4 விக்கெட்டுகளும் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

முதல் நாள் முடிவில் தென் ஆப்பிர்க்க்க அணி 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 8 ரன்களும் நைட் வாட்ச்மேன் மஹாராஜ் 6 ரன்களும் எடுத்துக் களத்தில் உள்ளார்கள். எல்கரை 3 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் பும்ரா.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் பற்றி பேசிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர், “மிகவும் சவாலான சூழலில் ரன்கள் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. முதல் இன்னிங்ஸில் நாங்கள் சற்று குறைவான ஸ்கோரையே எடுத்துள்ளோம். இன்னும் 50, 60 ரன்களைக் கூடுதலாக எடுத்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் அதைத்தான் எதிர்பார்த்தோம். 

விராட் கோலி அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். புஜாராவும் நன்கு விளையாடினார். காலையில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாகப் பந்துவீசியது. காலையில் மேகமூட்டமாக இருந்ததால் பேட்டிங்குக்குச் சவாலாக இருந்தது. எதிரணிக்கு எளிதாகச் சில விக்கெட்டுகளை வழங்கியுள்ளோம். அதைத் தவிர்த்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement