
Krunal Pandya And His Wife Pankhuri Sharma Blessed With A Baby Boy (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் வீரர் குர்ணல் பாண்டியா. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் மூத்த சகோதரரான குர்ணல் பாண்டியாவும் ஆல்ரவுண்டரே. ஸ்பின் ஆல்ரவுண்டரான குர்ணல் பாண்டியா இந்தியாவிற்காக 5 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல்லில் 98 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1,326 ரன்களை குவித்துள்ள அவர், 61 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கோர் வீரர்களில் ஒருவராக திகழ்ந்த குர்னால் பாண்டியா, கடந்த சீசனில் மும்பை அணியால் விடுவிக்கப்பட்டதையடுத்து, கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஆடினார்.
கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிற்காக விளையாடிய குர்னால் பாண்டியா, அதன்பின்னர் கடந்த ஓராண்டாக இந்திய அணியில் ஆடவில்லை.