
ஐபிஎல் 15ஆவது சீசனில் ஒருசில சர்ச்சைக்குரிய சண்டைக்கார வீரர்கள் ஒரே அணியில் இணைந்து ஆடுகின்றனர். 2019 ஐபிஎல்லில் ரன் அவுட்(மான்கட்) விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அஷ்வின் - பட்லர் ஆகிய இருவரும் இணைந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிவருகின்றனர்.
அதேபோல உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலியின் தொடரின்போது பரோடா அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியாவுடனான கருத்து முரண் காரணமாக அந்த அணியிலிருந்து வெளியேறியவர் தீபக் ஹூடா. ஆனால் இப்போது ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இருவரும் இணைந்து ஆடுகின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் பரோடா அணியில் குர்ணல் பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடிய தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா தன்னை வேண்டுமென்றே மற்றவீரர்கள் முன்பு மோசமான வார்த்தைகளால் திட்டுவதாகவும், தன் மீது பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் கடிதம் மூலம் புகார் கூறியிருந்தார்.