
Kyle Jamieson Returns To New Zealand Squad For England Tests (Image Source: Google)
கடந்த வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின்போது ஜேமிசனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அன்று முதல் அவர் சர்வதேச ஆட்டங்கள் எதிலும் விளையாடவில்லை. இதனால் ஜேமிசனை ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்ய சிஎஸ்கேவைத் தவிர வேறு எந்த அணியும் ஆர்வம் செலுத்தவில்லை.
காயத்திலிருந்து ஜேமிசன் மீண்டுவிட்டார், மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளார் என்று பயிற்சியாளர் ஃபிளெமிங்கிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் தேர்வு செய்தோம் என்று ஜேமிசனின் தேர்வு குறித்து விளக்கம் அளித்தார் சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.
ஜனவரி முதல் நியூசிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த ஜேமிசன், தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தேர்வாகியுள்ளார்.