
Kyle Jamieson Reveals The Reason Behind His Absence From IPL 2022 Auction (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக வீரர்கள் மெகா ஏலாம் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகுவதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் திடீரென அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கைல் ஜேமிசன் கூறும்போது, “கடந்த 12 மாதங்களுக்குப் பிறகே கரோனா தனிமைப்படுத்தல்கள், பயோ-புபுள் பாதுகாப்பு வலையம் என்று மன உளைச்சல் தரும் விவகாரங்கள் இருந்து வருகின்றன. எனவே அடுத்த 12 மாதங்களுக்கான கிரிக்கெட் அட்டவணையைப் பார்க்கும் போது அந்த நேரத்தை ஐபிஎல் தொடரில் செலவிடுவதை விட வீட்டில் இருப்பது நல்லது என்று முடிவெடுத்தேன்.