ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதன்படி இத்தொடர் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிய உள்ளது. துவக்க போட்டியும், இறுதிப்போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக கடந்த இரண்டு சீசன்களில் அணிகள், தங்களது மைதானங்களில் விளையாட முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், இந்தாண்டில் அனைத்து அணிகளும் தங்களது சோந்த மைதானங்களில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது கடைசிப் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவேன் எனக் கூறியிருந்தார். அதன்படி இந்தாண்டு கோப்பையை வென்றுகொடுத்துவிட்டு, சென்னையில் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதற்காக, சிஎஸ்கே வீரர்களும் அடுத்த மாதத்தில் இருந்து பயிற்சி முகாமை தொடங்க உள்ளனர்.