
வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது. இதில் லபுசாக்னே 154, ஸ்மித் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இந்நிலையில் இருவரும் இன்றும் தொடர்ந்து நன்கு விளையாடி இரட்டைச் சதமெடுத்தார்கள். லபுசாக்னே 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 152.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 598 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்களைச் சேர்த்தது.