Advertisement

பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து லாகூர் கலந்தர்ஸ் அணி விளையாடவுள்ளது.

Advertisement
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs  - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 26, 2024 • 10:46 PM

பாகிஸ்தானின் உள்ளூர் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் நடப்பு சீசன் புள்ளிப்பட்டியளில் முதலிடத்தில் இருக்கும் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து, புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்தில் இருக்கும் ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் லாகூர் கலந்தர்ஸ் அணி இதுவரை இந்த சீசனில் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் அந்த அணியின் பிளே ஆஃப் கனவும் ஏறத்தாழ முடிந்துள்ளது. இருப்பினும் இனி வரும் போட்டிகளில் அந்த அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு குறித்து நினைக்க முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 26, 2024 • 10:46 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - லாகூர் கலந்தர்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ்
  • இடம் - கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் கடாஃபி கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. மேலும் இந்த மைதானத்தின் பேட்டிங் சராசரி 162 ரன்களாக உள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டி அதிக ரன்கள் கொண்ட போட்டியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசி இரண்டு போட்டிகளிலுமே 200 ரன்களுக்கு மேல் அணிகள் சராசரியாக குவித்துள்ளனர். இதனால் நிச்சயம் இப்போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • லாகூர் கலந்தர்ஸ் - 09
  • முல்தான் சுல்தான்ஸ் -  09

உத்தேச லெவன்

லாகூர் கலாந்தர்ஸ்: ஃபகார் ஸமான், சாஹிப்சாதா ஃபர்ஹான், ரஸ்ஸி வான்டெர் டுசென், ஷாய் ஹோப், சிக்கந்தர் ராசா, அஹ்சன் பாட்டி, ஜஹந்தத் கான், கார்லோஸ் பிராத்வைட், ஷஹீன் அஃப்ரிடி (கே), முகமது இம்ரான், ஸமான் கான்

முல்தான் சுல்தான்ஸ்: உஸ்மான் கான், முகமது ரிஸ்வான் (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், தயப் தாஹிர், இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, டேவிட் வில்லி, உசாமா மிர், அஃப்தாப் இப்ராஹிம், அப்பாஸ் அஃப்ரிடி, முகமது அலி

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: முகமது ரிஸ்வான் (துணை கேப்டன்), சாஹிப்சாதா ஃபர்ஹான், ஷாய் ஹோப்
  • பேட்டர்ஸ்: உஸ்மான் கான், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஃபகர் ஸமான், ரஸ்ஸி வான்டெர் டுசென் (கேப்டன்)
  • ஆல்ரவுண்டர்கள்: சிக்கந்தர் ராசா, இஃப்திகார் அகமது
  • பந்துவீச்சாளர்கள்: டேவிட் வில்லி, ஷஹீன் அஃப்ரிடி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement