
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நேப்பியரில் நடைபெற்றது. இப்போட்டியி டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிக் செய்ய அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினாலும், மார்க் சார்மேனின் அபாரமான சதத்தின் மூலமாகவும், டேரில் மிட்செல், முகமது அப்பாஸ் ஆகியோரின் அரைசதங்களின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 345 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 132 ரன்களையும், டேரில் மிட்செல் 76 ரன்களிலும், முகமது அப்பாஸ் 52 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் உஸ்மான் கான் 39 ரன்களிலும், அப்துல்லா ஷஃபிக் 36 ரன்களிலும், பாபர் ஆசாம் 78 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 30 ரன்களிலும் சல்மான் ஆகா 50 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்களுக்கு ஆல் அவுட்டாந்து. நியூசிலாந்து தரப்பில் நாதன் ஸ்மித் 4 விக்கேட்டுகளை வீழ்த்தினார்.