
பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இன்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய லாகூர கலந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஸமான் - மிர்ஸா தாஹிர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் மிர்ஸா தாஹிர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் 19 ரன்களிலும், காம்ரன் குலாம் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.
இதற்கிடையில் மற்றொரு தொடக்க வீரரான ஃபகர் ஸமான் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். பின் 42 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்த ஃபகர் ஸமான் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா - ஹுசைன் தாலத் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் 20 ரன்களைச் சேர்த்திருந்த ஹுசைன் தாலத் ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி வரை களத்தில் இருந்த சிக்கந்தர் ரஸா 19 ரன்களைச் சேர்த்தார்.