Advertisement

எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 15, 2025 • 03:53 PM
Los Angeles Knight Riders vs Texas Super Kings Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 15, 2025 • 03:53 PM
இதில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் சுனில் நரைன் தலைமையிலான லாஸ் ஏஞ்சல் நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் சூப்பர் கிங்ஸ் அணியானது முதல் போட்டியில் எம்ஐ அணியை வீழ்த்திய உத்வேகத்துடனும், நைட் ரைடர்ஸ் அணி யூனிகார்னிஸிடம் தோல்வியைத் தழுவிய கையோடும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

LAKR vs TEX Match Details

மோதும் அணிகள்- லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்
இடம் - ஓக்லாண்ட் கொலிசியம், கலிபோர்னியா
நேரம் - ஜூன் 16, அதிகாலை 2.30 மணி (இந்திய நேரப்படி)

Oakland Coliseum, California Pitch Report

கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானம் ஒரு புதிய மைதானமாகும், இங்கு தற்போது வரையிலும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அந்தவகையில் தற்போது வரையில் நடைபெற்று முடிந்த 4 போட்டிகளில் மூன்று முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இது பேட்டர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக இருப்பதால் வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காதூ என பார்க்கப்படுகிறது. 

LAKR vs TEX: Where to Watch?

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

LAKR vs TEX: Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 01
  • டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்-00
  • லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - 01    
LAKR vs TEX Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - உன்முக்த் சந்த், டெவான் கான்வே
  • பேட்டர்கள்- அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், டேரில் மிட்செல், கால்வின் சாவேஜ்
  • பந்துவீச்சாளர்கள்- அலி கான், நூர் அஹ்மத், ஆடம் மில்னே.
LAKR vs TEX Predicted Playing 11

Los Angeles Knight Riders XI : சுனில் நரைன் (கேப்டன்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஆண்ட்ரே பிளெட்சர், உன்முக்த் சந்த், நிதிஷ் குமார், சைஃப் பதார், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷாட்லி வான் ஷால்க்விக், மேத்யூ டிராம்ப், அலி கான், தன்வீர் சங்கா

Texas Super Kings XI : ஃபாஃப் டு பிளெசிஸ், டெவான் கான்வே, டேரில் மிட்செல், சைதேஜா முக்கமல்ல, மிலிந்த் குமார், டொனோவன் ஃபெரீரா, கால்வின் சாவேஜ், முகமது மொஹ்சின், ஆடம் மில்னே, நூர் அகமது, ஜியா-உல்-ஹக்

LAKR vs TEX Dream11 Prediction, LAKR vs TEX Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, LAKR vs TEX Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Los Angeles Knight Riders vs Texas Super Kings

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement