
Laxman, Irfan Pick Their India Playing XI For ODI Series Against Sri Lanka; No Place For Devdutt Pad (Image Source: Google)
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து, அந்த அணிக்கெதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிவில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13ஆம் தேதி கொழும்புவில் நடைபெறுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் இல்லாமல் சென்றுள்ள இந்திய அணியின் இத்தொடர் மிதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் இலங்கை அணியுடனான போட்டியில் களமிறங்கும் உத்தேச அணிகளை முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர்களான விவிஎஸ் லக்ஷ்மண், இர்ஃபான் பதான் ஆகியோர் தங்களது உத்தேச அணிகளை தெரிவித்துள்ளனர்.