
Lee outmuscles West Indies in SA's commanding win (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸிலில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையால் தடபட, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்களச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக லிசெல் லீ 75 ரன்களை சேர்த்தார்.
அதன்பின் இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 20 ஓவரில் வெஸ்ட் இண்டிஸ் மகளிர் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.