
Lee, Wolvaardt fifties help South Africa secure series win (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீரமானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டொட்டின் அதிரடியாக்க விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் அவரைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை.
இதனால் 48.4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக டொட்டின் 71 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இஸ்மைல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.