எல் எல் சி 2022: பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய தாஹிர்; உலக ஜெயண்ட்ஸ் வெற்றி!
எல் எல் சி 2022: இம்ரான் தாஹிரின் அபாரமான ஆட்டத்தினால உலக ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மஹாராஜாஸ் அணியை வீழ்த்தியது.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் இந்தியா மஹாராஜாஸ் - உலக ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நத்தின. இதில் டாஸ் வென்ற உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய இந்திய மஹாராஜாஸ் அணி நமன் ஓஜாவின் அபார சதத்தின் காரணமாக 20 ஓவர்கல் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நமன் ஓஜா 140 ரன்களைச் சேர்த்தார்.
Trending
அதன்பின் கடின இலக்கை துரத்திய உலக ஜெயண்ட்ஸ் அணியில் கெவின் ஓ பிரையன், ஜானதன் ட்ரோட், கோரி ஆண்டர்சன், பிராட் ஹாடின், அல்பி மோர்கல் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்திருந்த கெவின் பீட்டர்சனும் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய மஹாராஜாஸ் அணியின் வெற்றி உறுதியானது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
Imran Tahir ! You Beauty
— Mustafa Abid (@mmustafa_abid) January 22, 2022
52 off 19 balls #Cricket #LegendsLeagueCricket @llct20 pic.twitter.com/B1Hxoz6w9p
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இம்ரான் தாஹிர் 19 பந்துகளில் அரைசதம் அடித்து உலக ஜெயண்ட்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகளும் அடங்கும்.
இதன்மூலம் உலக ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தியாசத்தில் இந்திய மஹாராஜாஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now