ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்த அணி 12ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்று இருக்கிறது . ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை தொகுதி சுற்றுக்கான போட்டியில் காட்லாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்ததோடு 2023 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பையில் விளையாடவும் தகுதி பெற்றிருக்கிறது .
கடந்த 1996ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல்முறையாக பங்கு பெற்ற நெதர்லாந்து அணி அதன் பிறகு 2003 ,2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்றது. அதன்பிறகு 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு உலகக் கோப்பைகளை தவறவிட்ட பின்னர் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று இருக்கிறது .
இதில் மற்றொரு சிறப்பம்சமாக நெதர்லாந்து அணியின் தந்தை மற்றும் மகன் இருவரும் உலகக்கோப்பை விளையாடியதற்கான பெருமையை பெற இருக்கின்றனர் . நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் பஸ் டி லீட் . இவரது தந்தையான டிம் டி லீட் நெதர்லாந்து அணிக்காக இதற்கு முன்பு விளையாடிய நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.