
'Like MS Dhoni always said..': R Ashwin recalls former India captain's words (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி புகழ் பெற்று, பின் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்
இந்த நிலையில் அஸ்வின் தனது இருண்ட கால பக்கங்கள் குறித்து இணையத்தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் 2018-19ஆம் ஆண்டு காயத்தால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறினார். காயத்திலிருந்து குணமடைந்துவிடுவேன் ஆனால் எப்படி, எப்போது என்று தெரியவில்லை என்று புலம்பினேன் என்று அஸ்வின் கூறினார்.