
லைகா கோவை கிங்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ், டிஎன்பிஎல் இறுதிப்போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் (Image Source: Google)
Lyca Kovai Kings vs Dindigul Dragons, TNPL 2024 Final Dream11 Prediction: தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியன் ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியானது நாளை சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
LKK vs DD - போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - லைகா கோவை கிங்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்
- இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம் - ஆகஸ்ட் 04, இரவு 7.15 மணி
LKK vs DD Final Pitch Report