
LLC 2022: Asia lions beat World Giants by 6 wickets (Image Source: Google)
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உலக ஜெண்ட்ஸ் அணி, ஆசிய லையன்ஸ் அணியை எதிர்கொண்டது .
இதில் முதலில் பேட்டிங் செய்த ஜெயண்ட்ஸ் அணி கெவின் ஓ பிரையனின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கெவின் ஓ பிரையன் 95 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய லையன்ஸ் அணியில் காம்ரன் அக்மல் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தில்சன் - உபுல் தரங்கா இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.