எல்எல்சி 2022: பில்வாரா கிங்ஸை வீழ்த்தியது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
பில்வாராகிங்ஸ் அணிக்கெதிரான எல் எல் சி லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
லெஜண்ட்ஸ் லீக் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ், இர்ஃபான் பதான் தலைமையிலான பில்வாரா கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பில்வாரா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர், ஜிம்பாப்வே முன்னாள் வீரர் சாலமன் மிர் 38 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்களை குவித்து அசத்தினார். மற்றொரு தொடக்க வீரரான கம்பீர் 12 பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
Trending
அடுத்து மற்றொரு ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மஸகட்சா 48 ரன்களை குவித்து அசத்தினார். தொடர்ந்து தினேஷ் ரம்டின் 20 ரன்களை அடித்ததால், இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 198/5 ரன்களை குவித்து அசத்தியது.
அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய பில்வாரா கிங்ஸ் அணியில் யாருமே பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அந்த அணியில் நமன் ஓஜா 20, ஸ்ரீவாஸ்டவா 27 ஆகியோர் மட்டுமே 20+ ரன்களை அடித்தனர்.
அணியின் நட்சத்திர வீரர்களான யூசுப் பதான் 14 , இஃர்பான் பதான் 17 ஆகியோரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், அந்த அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே சேர்த்து.
இந்தியா கேப்பிடல்ஸ் அணி தரப்பில் பங்கஜ் சிங், பிரவின் தாம்பே, ராஜத் பாட்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்கள். இதன்மூலம் இந்தியா கேப்பிட்டல்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் பில்வாரா கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now