
ஓய்வுபெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படு களமிறங்கிய கோனார்க் சூர்யாஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரிச்சர்ட் லீவி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 21 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 63 ரன்களைக் குவித்து அசத்தினார். மேற்கொண்டு யூசுப் பதான் 33 ரன்களைச் சேர்க்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைக் குவித்தது.
சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தரப்பில் சுபோத் பாட்டி 3 விக்கெட்டுகளையும், சதுரங்கா டி சில்வா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய சதர்ன் அணியில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் ஸ்ரீவஸ்த்ஸ் கோஸ்வாமி 18 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஹாமில்டன் மஸகட்ஸா 20 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.