மூன்றாவது முறையாக கோல்டன் டக்காகிய விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி , நடப்பு ஐபிஎல் தொடரில் 3வது முறையாக கோல்டன் டக்காகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்போட்டியின் முதல் பந்தை விராட் கோலி எதிர்கொண்டார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஜெகதிஸ் சுச்சித், முதல் பந்தை வீச, அதேனை விராட் கோலி மிட் விக்கெட் பகுதியில் அடிக்க முற்பட்டு, வில்லியம்சனிடம் கேட்ச் ஆனார். இதனையடுத்து முதல் பந்திலேயே ஆபத்து நீங்கிவிட்டது என ஐதராபாத் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
Trending
இதனையடுத்து ஏமாற்றத்துடன் தலையை கீழே குணிந்தவாறே பெவிலியன் நோக்கி நகர்ந்தார். அப்போது விரக்தியில் தலையில் கோலி கை வைத்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடித்த குறைவான ரன்கள் மற்றும் சராசரி என்றால் அது இது தான். இதுவரை 12 போட்டியில் விளையாடியுள்ள கோலி, 216 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 19.6
இதற்கு முன்பு விராட் கோலி குறைவான ரன்களை அடித்தது 2017ஆம் ஆண்டு தான். அதில் 10 போட்டியில் விளையாடி 308 ரன்களை விராட் கோலி அடித்துள்ளார். தற்போது குறைந்தது கோலிக்கு 2 போட்டிகள் எஞ்சி உள்ளன. அதில் கோலி எதாவது ரன் அடித்தால் மட்டுமே 300 ரன்களை தொட வேண்டும்.
ஒரு காலத்தில் சுழற்பந்துவீச்சு என்றால் கோலிக்கு அல்வா சாப்பிட்ற மாதிரி,தற்போது அவர் அதிக முறை சுழற்பந்துவீச்சில் தான் ஆட்டமிழந்து வருகிறார். கடந்த போட்டியிலும் மொயின் அலி பந்தில் தான் போல்ட் ஆனார். இப்படி ஒரு குறை உள்ள வீரர் இந்திய அணியில் எப்படி 3வது வீரராக களமிறங்க முடியும். இதனால் விராட் கோலியின் இந்திய அணியின் இடத்துக்கு உண்மையாகவே ஆபத்து வந்துவிட்டது.
Win Big, Make Your Cricket Tales Now