
பாகிஸ்தான் அணியில் வீரர்கள் தேர்வு சரியில்லை என்றும், பல வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு முறையை பார்த்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முகமது அமீர் கடந்த 2020, டிசம்பர் மாதம் தீடீரென தனது ஓய்வை அறிவித்தார். அவர் தனக்கு, பாகிஸ்தான் அணியில் சரியான வாய்ப்பு வழங்குவதில்லை, நிர்வாகம் மன ரீதியாக தனக்கு கொடுத்த அழுத்தமே நான் ஓய்வு பெற காரணம் என பரபரப்பை கிளப்பினார்.
இந்நிலையில் தற்போது நேராக பாகிஸ்தானின் வீரர்கள் தேர்வு முறையை சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் தேர்வர்கள், அணியின் இளம் வீரர்கள் நேரடியாக சர்வதேச போட்டிகளில் வந்து கற்றுக்கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். சர்வதேச போட்டிகள் என்பது கற்றுக்கொள்ள வந்த பள்ளிக்கூடம் கிடையாது. அங்கு ஆட்டத்தை பற்றி நன்கு அறிந்த, சிறந்த திறமை கொண்ட வீரர்களே இருக்க வேண்டும்.