லார்ட்ஸில் டிக்கெட் விற்பனையாகாதது சங்கடமாகவுள்ளது - மைக்கேல் வாகன்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் விலை உயர்த்தியதையடுத்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி இம்மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார்.
Trending
பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் கூட்டணியில் முதல்முறையாக களமிறங்கும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 2ஆம் தேதி லார்ட்ஸில் தொடங்குகிறது. இந்நிலையில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.
கிரிக்கெட்டின் வீடு என்றழைக்கப்படும் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் விற்பனை பெருமளவில் சரிந்ததற்கு விலை ஏற்றமே காரணம் என ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முழுமையாக ரசிகர்கள் இருக்கமாட்டார்கள் என்பது சங்கடமாக உள்ளது. டிக்கெட்டின் விலை குறைந்தால் ரசிகர்கள் அதிகளவில் வருவதற்கு வாய்ப்புண்டு. ஆனல் அவர்கள் ஏன் இவ்வாளவு விலையை உயர்த்தியுள்ளனர்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மைக்கேல் வாகனின் இப்பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரை தெரிவித்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now