ஐபிஎல் 2023: நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது - ஷிகர் தவான்!
பேட்டிங் யூனிட்டாக நாங்கள் அடுத்தடுத்து பல விக்கெட்டுகளை இழந்தோம். எங்களால் இதனால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 16ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாசை வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீச, பேட்டிங் செய்ய வந்த பஞ்சாபுக்கு எல்லாமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
பதினைந்து ஓவர்களில் 88 ரன்களுக்கு ஒன்பது விக்கட்டுகளை இழந்த பஞ்சாப் அணிக்கு, தனி ஒரு வீரனாக நின்று பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அற்புதமாக விளையாடி 66 பந்துகளில் 12 பவுண்டரி ஐந்து சிக்ஸர்கள் உடன் 99 ரன்களை ஆட்டம் இழக்காமல் குவித்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
Trending
தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 17.1 எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ராகுல் திரிபாதி ஆட்டம் இழக்காமல் 48 பந்துகளில் 10 பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் 71 ரன்கள் எடுத்தார். கேப்டன் மார்க்ரம் 21 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் உடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றார்.
மூன்றாவது ஆட்டத்தில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இது முதல் வெற்றியாகும். மூன்று ஆட்டங்களில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது முதல் தோல்வியாகும். இந்த ஆட்டத்தில் தனி ஒரு வீரனாக நின்று அசத்திய பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான், “பேட்டிங் யூனிட்டாக நாங்கள் அடுத்தடுத்து பல விக்கெட்டுகளை இழந்தோம். எங்களால் இதனால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. எனவே தோல்வி அடைந்தோம். 180 என்பது இங்கு நியாயமான ஸ்கோராக இருந்திருக்கும். விக்கெட் மிகவும் நன்றாக இருந்தது. அதே சமயத்தில் ஸ்விங் மற்றும் சீமிங் இருந்தது.
ஒரு குழுவாக நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. நாங்கள் சென்று என்னென்ன செய்து மீண்டும் திரும்ப வரலாம் என்று ஆலோசனை செய்ய உள்ளோம். நான் கேப்டன் பதவியை அனுபவித்து செய்வதோடு அணிக்கு முன்னே நிற்பதையும் ரசித்து செய்கிறேன். எங்களிடம் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் நாங்கள் இதை எடுத்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now