
Loved My Stay at CSK, I am Sure They Can Lift the Trophy: Sam Curran (Image Source: Google)
ஐபிஎல் 2021 போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.
மேலும் இன்னும் சில தினங்களில் அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லவுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவரது சகோதரர் டாம் கரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து சிஎஸ்கே அணியின் இணையத்தளத்துக்கு பேட்டியளித்த சாம் கரண், “ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பைப் போட்டிகளில் இருந்து விலகியது வேதனையளிக்கிறது. சென்னை அணியில் எனக்கு அற்புதமான தருணங்கள் அமைந்தன. வீரர்கள் அருமையாக விளையாடி வருகிறார்கள்.