
LPL 2021: Jaffna Kings are through to the finals for the second time in a row (Image Source: Google)
லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் - தம்புலா ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தம்புலா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - ரஹ்மனுல்லா குர்பஸ் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
பின் 70 ரன்களில் குர்பஸ் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஃபெர்னாண்டோ சதமடித்து அசத்தினார். இதன் மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைச் சேர்த்தது.