
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான பி லௌவ் கண்டி அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான தம்புலா ஆரா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தம்புலா அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் காயம் காரணமாக கண்டி அணியின் கேப்டன் வநிந்து ஹசரங்கா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்தினார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய தம்புலா அணியில் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 5 ரன்களுக்கும், கேப்டன் குசால் மெண்டிஸ் 22 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சமரவிக்ரமா - குசால் பெரேரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது.