
இலங்கையில் நடைபெற்றுவரும் 5ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் கலே மார்வெல்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய கலே அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா - அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் 12 ரன்களிலும், பனுகா ராஜபக்ஷா ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அத்ன்பின் இணைந்த சஹான் அராச்சிகே மற்றும் இசுரு உதானா இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய உதானா அரைசதம் கடந்தார். அதன்பின் சஹான் அராச்சிகே 35 ரன்களிலும், இசுரு உதானா 52 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.