
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி ரசிகர்களால் சின்னதல என்று கொண்டாடப்பட்டு வருபவர் சுரேஷ் ரெய்னா. இந்தியாவில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றுள்ளார். இதனால் சுரேஷ் ரெய்னா வெளிநாட்டு கிரிக்கெட் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்தார்.
இதனிடையே ஐபிஎல் தொடரை பின்பற்றி இலங்கையிலும் லங்கா பிரீமியர் லீக் தொடர் 3 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. 4ஆவது சீசனுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலை 31ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் எல்பிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் முதல்முறையாக நேற்று நடைபெற்றது. இதில் இலங்கையைச் சேர்ந்த 5 அணிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா தனது பெயரை ஏலப் பட்டியலில் கொடுத்திருந்தார். இதனால் சுரேஷ் ரெய்னா எந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. எல்பிஎல் ஏலத்தின் 11ஆவது செட்டில் சுரேஷ் ரெய்னாவின் பெயரும் பட்டியலிடப்பட்டிருந்தது.