
LPL2021: Yusuf Pathan available for selection (Image Source: Google)
ஐபிஎல் தொடர்களைப் போலாவே பல நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகின்றன. அதன்படி கடந்தாண்டு இலங்கை கிரிக்கெட் வாரியமும் லங்கா பிரீமியர் லீக் என்ற டி20 தொடரை அறிமுகம் செய்தது.
அதன் படி இலங்கையில் நடைபெற்றுவந்த முதல் சீசன் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது சீசன் வரும் ஜூலை 30ஆம் தேதி முதல் நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனால் ஒவ்வொரு அணியும் வீரர்களைத் தேர்வுசெய்யும் முனைப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் மிக முக்கியமாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதான் லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.