Advertisement

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 22, 2025 • 11:35 AM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 22, 2025 • 11:35 AM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் லக்னோ அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Also Read

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வியைச் சந்தித்த கையோடு, இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கையோடு அந்த அணி இப்போட்டியை எதிர்கொள்வதால் கூடுதல் உத்வேகம் பெற்றுள்ளது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத் ஆகியோர் முதுகெலும்பாக உள்ளார். இருப்பினும் ரிஷப் பந்த், டேவிட் மில்லர் ஆகியோர் சொதப்பி வருவது சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. அணியின் பந்துவீச்சு துறையில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ் ஆகியோருடன் தற்போது மயங்க் யாதவும் அணியில் இணைந்துள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர்/மயங்க் யாதவ், ஆகாஷ் தீப், அவேஷ் கான், திக்வேஷ் சிங்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்களைத் தழுவி புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வந்த டெல்லி அணி கடைசி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் அந்த அணி கூடுதல் முயற்சியுடன் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தமட்டில் கருண் நாயர், அபிஷேக் போரல், அக்ஸர் படேல், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தமட்டில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் உள்ளிட்டோர் அபாரமாக செயல்பட்டு வரும் நிலையில், முகேஷ் குமார், மோஹித் சர்மா உள்ளிட்டோர் ரன்களைக் கட்டுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 06
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- 03
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 03

Also Read: LIVE Cricket Score

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்- கேஎல் ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - மிட்செல் மார்ஷ், கருண் நாயர், ஆயுஷ் படோனி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், ஐடன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள்- மிட்செல் ஸ்டார்க், அவேஷ் கான், குல்தீப் யாதவ்.
     

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement