Advertisement

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 12, 2024 • 14:40 PM
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளது.

Trending


மறுபக்கம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஒரு வெற்றி நான்கு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனல பலம் வாய்ந்த லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிப்பட்ட உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கேஎல் ராகுல் தலைமையில் நடப்பு சீசனை எதிர்கொண்டுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்தடுத்த மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளதால், தங்களது தொடர் வெற்றியை தொடரும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அந்த அணியை பொறுத்தவரையில் கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரான் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். பந்துவீச்சில் இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் கவனம் ஈர்க்கிறார்.

ஆனால் அவர் காயம் கரணமாக இப்போட்டியில் இடம்பிடிக்க மாட்டார் என்பது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளதால் அது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இவர்களுடன் மணிமாறன் சித்தார்த், ரவி பிஷ்னோய் மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோரும் கடந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது நிச்சயம் இப்போட்டியில் அவர்களுக்கு கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லக்னோ அணி இப்போட்டியை சொந்த மைதானத்தில் விளையாடவுள்ளது கூடுதல் சாதகமாக பார்க்கப்படுகிறது. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், யாஷ் தாக்கூர், மயங்க் யாதவ்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பந்த் தலைமையில் இந்த சீசனை எதிர்கொண்டுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இது அவ்வளவு சிறப்பான தொடக்கமாக அமையவில்லை. ஏனெனில் அந்த அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடியனாலும், தொடர்ச்சியாக அவர்களிடமிருந்து சிறப்பான செயல்பாடுகள் வெளிவராமல் இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சிலும் இஷாந்த் சர்மா, அக்ஸர் படேல் ஆகியோரத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்பி வருகின்றனர். அதிலும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, கலீல் அஹ்மத் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக ரன்களை வாரி வழங்கி வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர்த்து குல்தீப் யாதவ், மிட்செல் மார்ஷ் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக போட்டிகளை தவறவிட்டுள்ளது அணிக்கு பெரும் சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது. இதனால் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபாதைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: பிரித்வி ஷா, டேவிட் வார்னர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரிஷப் பந்த் (கேப்டன்), அக்ஸர் படேல், லலித் யாதவ், ஜெய் ரிச்சர்ட்சன், அண்ட்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement