
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக்ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் சிறந்த பந்துவீச்சை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ரஷித் கான் பதிவு செய்தார்.
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ்ட்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்திருந்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 13.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்து 62 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகள் பெற்று முதல்அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.