Advertisement

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 07, 2024 • 16:25 PM
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Trending


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் இந்த இரு வெற்றிக்கும் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தது அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தான். குறிப்பாக 150 கிமீ வேகத்தில் சராசரியாக பந்துவீசும் மயங்க் யாதவ், தொடர்ந்து எதிரணி பேட்டர்களை நிலை குழைய செய்வதுடன், அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி, ரன்களை கட்டுப்படுத்தி வருகிறார்.

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான தொடக்கத்தை பெறும் கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டொய்னிஸ் போன்ற வீரர்கள் நிலைத்து நின்று விளையாடினால் நிச்சயம் லக்னோ அணியின் வெற்றியை தடுப்பது என்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்எஸ்ஜி உத்தேச லெவன்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ், மணிமாறன் சித்தார்த்.

குஜராத் டைட்டன்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய நான்கு போட்டிகளில் தலா 2 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்துள்ளது. அணியின் பேட்டிங்கில் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் கடந்த போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், விருத்திமான் சஹா போன்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதன் காரணமாக இப்போட்டியில் சில மாற்றங்கள் நிகழலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் ஷாரூக் கான், டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரையில் மொஹித் சர்மா, நூர் அஹ்மத், ரஷித் கான் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், உமேஷ் யாதவ், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் போன்ற வீரர்கள் ரன்களை கட்டுப்படுத்த தவறி வருவது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கேப்டன்), கேன் வில்லியம்சன், சாய் சுதர்ஷன், விஜய் சங்கர்/ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, அஸ்மதுல்லா ஓமர்சாய், உமேஷ் யாதவ், ரஷித் கான், நூர் அஹ்மத், மோஹித் சர்மா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement