Advertisement

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!

லக்னோ - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 30, 2024 • 13:30 PM
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், மீதமிருக்கும் மூன்று இடங்களை எந்த அணிகள் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இன்று நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது, கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Trending


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகளைப் பெற்றும் புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ளது. லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் கேஎல் ராகுல், நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், குயின்டாக் டி காக்கும், பந்து வீச்சில் யாஷ் தாக்குர், மொசின் கான், குருணல் பாண்ட்யா, ரவி பிஷ்னோயும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

அதேசமயம் காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் ஆடாத இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் முழு உடல் தகுதியை எட்டி விட்டதாகவும், அனேகமாக அவர் இன்றைய போட்டிக்கானஅணியில் இடம் பெறுவார் என்றும் அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். ஒருவேளை இன்றைய மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலாக சராசரியாக பந்து வீசி அச்சுறுத்தும் மயங்க் யாதவின் வருகை அந்த அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்/மயங்க் யாதவ், நுவான் துஷாரா.

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரை எதிர்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது சரிவர செயல்படாமல் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் வெறும் 3 வெற்றுகளை மட்டுமே பெற்று, 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி 6 புள்ளிகளைப் பெற்றும் புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

மும்பை அணியில் பேட்டிங்கில் திலக் வர்மா, ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கேப்டன் ஹர்திக் பாண்டுயா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் போன்ற வீரர்கள் இருந்த போதும் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பாடாதது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் அந்த அணி ஜஸ்ப்ரித் பும்ராவை மட்டுமே அதிகம் நம்பி இருக்கிறது. அவருடண் ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா மற்றும் ஆகாஷ் மத்வால் ஆகியோரும் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, பியூஷ் சாவ்லா, லூக் வுட்/ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement