
ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் வலிமைமிக்க இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகளைச் சந்தித்து 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேஎல் ராகுல், குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடிய வகையில் தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.