
LSG's Quinton de Kock and KL Rahul smash record opening IPL partnership (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல் - டி காக் ஜோடி, 20 ஓவர்கள் முழுவதும் விளையாடி 210 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது.
இதன் மூலம் ஒட்டு மொத்தமாக ஐபிஎல் தொடரில் தொடக்க விக்கெட் பாட்னர்ஷிப்-க்கு அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் பட்டியலில் ராகுல் - டி காக் இணை முதல் இடத்தில் உள்ளது.
இதற்குமுன் 2019 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் (ஹைதராபாத் அணி ) கூட்டணி 185 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ராகுல் - டி காக் இணை முறியடித்துள்ளது.