Advertisement

ஐபிஎல் 2022: நாங்கள் தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!

பிட்ச் எப்படி செயல்படும் என்பதை கணிக்காமல், நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்தது தவறுதான் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Lucknow Outplayed Us In Batting & Bowling, Says Shreyas Iyer After Losing Against LSG
Lucknow Outplayed Us In Batting & Bowling, Says Shreyas Iyer After Losing Against LSG (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 08, 2022 • 12:15 PM

ஐபிஎல் 15ஆவது சீசன் 53ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 08, 2022 • 12:15 PM

முதலில் களமிறங்கிய லக்னோ அணியில் குவின்டன் டி காக் 50 (29), தீபக் ஹூடா 41 (27), க்ருனால் பாண்டியா 25 (27), மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 28 (14) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், அந்த அணி 20 ஓவர்களில் 176/7 ரன்களை குவித்து அசத்தியது.

Trending

இலக்கை துரத்திக் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஆண்ட்ரே ரஸல் 45 (19), சுனில் நரைன் 22 (12) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார்கள். மற்றவர்கள் படுமோசமாக சொதப்பியதால், கொல்கத்தா அணி 14.3 ஓவர்களில் 101/10 ரன்கள் மட்டும் அடித்து, 73 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இப்போட்டியில் தோற்றது மூலம் கொல்கத்தா அணி 11 போட்டிகளில் 4 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. இந்த அணியால் அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இந்த சீசனில் 10 அணிகள் பங்கேற்பதால், 16 புள்ளிகள் மிகவும் அவசியம் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் தோற்றப் பிறகு பேசிய ஷ்ரேயஸ் ஐயர், தோல்விக்கான காரணங்களை விளக்கினார். ‘‘பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் லக்னோ அணியினர் சிறப்பாக செயல்பட்டனர். பவர் பிளேவில் ரன்களை குவித்தார்கள். பிட்ச் எப்படி செயல்படும் என்பதை கணிக்காமல், நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்தது தவறுதான். லக்னோ அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்திட முடியும் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவர்கள் இறுதியில் அபாரமாக செயல்பட்டு பெரிய ஸ்கோர் அடித்துவிட்டனர்.

சேஸிங் குறித்து நானும், பயிற்சியாளர் மெக்கல்லமும் விவாதித்தோம். இது எப்போதும் நடப்பதுதான். டாஸ் ஜெயிக்காமல் இருப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். மிடில் ஓவர்களில் எங்களது பந்துவீச்சு சிறப்பானதாக இருந்தது. அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றிதான் எங்களுக்கு தேவை. அதற்காக கடுமையாக உழைப்போம்’’ எனத் தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement