
இந்தியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 0-3 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே முதல் டி20 போட்டியை கைப்பற்றிய நியூசிலாந்து, 2 ஆவது டி20 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று சமநிலை பெற்றுள்ளது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது கடைசி டி20 போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் அகமதாபாத் வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், கடந்த போட்டியில் நியூசிலாந்து அணி 99 ரன்களில் சுருண்டதும், இந்தியா 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்த மைதானம் டி20 போட்டிக்கு உருவாக்கப்படுவதே கிடையாது. கடினமான மைதானமாக இருந்தாலும் சரி, எளிதான மைதானமாக இருந்தாலும் விளையாடுவது எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், மைதானத்தை உருவாக்குபவர்கள் தவறு செய்துவிட்டனர். அவர்கள் மைதானத்தை முன் கூட்டியே தயார் செய்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.